
கோத்தா பாரு, ஜூலை-28- ஏற்கனவே 2 மனைவியரைக் கொண்ட 64 வயது முதியவர், சொந்த கொழுந்தியாளையே கற்பழித்ததாக கிளந்தான் கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 18-ஆம் தேதி பாச்சோக், குபாங் கோலோக்கில் (Kubang Golok) உள்ள கிராமத்தில் அக்கொடூரம் நடந்துள்ளது.
அனைவரும் ஒன்றாக வசித்து வரும் வீட்டின் ஓர் அறையில், யாரும் இல்லாத போது 18 வயது வயது கொழுந்தியாளை அம்முதியவர் கற்பழித்ததாக குற்றச்சாட்டில் கூறப்பட்டது.
எனினும் அந்நபர் குற்றத்தை மறுத்து விசாரணைக் கோரினார். இதையடுத்து 12,000 ரிங்கிட் மற்றும் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் அந்நபர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஆகஸ்ட் 25-ல் வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 30 ஆண்டுகள் வரை சிறையும் பிரம்படி தண்டனையும் விதிக்கப்படலாம்.