Latestஉலகம்சிங்கப்பூர்
2 வாரங்களில் இரண்டாவது மலேசியராக சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார் பன்னீர் செல்வம்

சிங்கப்பூர், அக்டோபர்-8,
சிங்கப்பூருக்குள் போதைப் பொருள் கடத்தியக் குற்றத்திற்காக, 38 வயது மலேசியர் பி. பன்னீர் செல்வம் தூக்கிலிடப்பட்டுள்ளார்.
கடைசி நேர மேல்முறையீடு உட்பட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் அவை பலனளிக்காமல், இன்று அதிகாலை அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பன்னீரின் சகோதரி பி. சங்கரி அதனை உறுதிப்படுத்தினார்.
51.84 கிராம் போதைப்பொருள் கடத்தியதாக 2017-ஆம் ஆண்டு சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தால் பன்னீர் மரணதண்டனை விதிக்கப்பட்டார்.
அவரது மேல்முறையீடுகளும் பொது மன்னிப்புக் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டு விட்டன.
இதையடுத்து போதைப் பொருள் கடத்தலுக்காக இரண்டே வாரங்களில் அக்குடியரசில் தூக்கிலிடப்பட்ட இரண்டாவது மலேசியராக அவர் விளங்குகிறார்.
முன்னதாக செப்டம்பர் 25-ஆம் தேதி கே. தட்சிணாமூர்த்தி தூக்கிலிடப்பட்டார்.