
ஜப்பான், நவம்பர் 22 – ஜப்பானில் சுமார் 20 ஆண்டுகளாக காலியாக இருந்து வந்த வீடொன்றில் நுழைந்த சில பள்ளி மாணவர்கள், பெரிய அளவில் குவிக்கப்பட்ட பண நோட்டுஐ கண்டுபிடித்துள்ளனர்.
அந்தக் நோட்டு குவியலின் மொத்த தொகை சுமார் 2.6 மில்லியன் ‘yen’ என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அம்மாணவர்கள் அந்தப் பணத்தின் ஒரு பகுதியை திருடி சென்றதைத் தொடர்ந்து அத்தகவல் பிற மாணவர்களிடமும் பரவியதால், மே மற்றும் ஜூன் மாதங்களில் மேலும் பல இளையோர் அந்த வீட்டினுள் நுழைந்து பணத்தை எடுத்திருக்கின்றனர்.
இந்நிலையில் கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில், போலீசார் வீட்டைச் சோதனை செய்ய தொடங்கியுள்ளனர்.
இச்சம்பவம் ஜப்பானில் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.



