கோலாலம்பூர், டிச 23 – ஐக்கிய அரபு சிற்றரசில் , அபு டாபியில் நடைபெற்ற 20ஆவது உலக சீலாட் போட்டியில் 65 முதல் 70 கிலோ உட்பட்டவர்களுக்கான Putera பொது பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் மலேசிய இந்தியர் சீலாட் வீரர் என்ற பெருமையை வி. தர்மராஜ் பெற்றுள்ளார்.
இறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் சீலாட் வீரர் Diyor Xudoyberdiyev வை வீழ்த்தி அவர் வெற்றி பெற்றார்.
அந்த போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மலேசியாவின் ஆறு சீலாட் வீரர்களில் தர்மராஜூம் ஒருவராவார்.
அப்போட்டியில் மலேசிய சீலாட் வீரர்கள் 9 வெள்ளிப் பதக்கம் மற்றும் நான்கு வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.