
கோலாலம்பூர், ஏப்ரல்-5-பேராக்கில் பிறந்து வளர்ந்து இன்று 54 வயதிலிருக்கும் ஓர் ஆடவர், ‘நான் உயிரோடு இருக்கிறேன்’ என்பதை நிரூபிக்க 17 ஆண்டுகளாகப் போராடி வருகிறார்.
கேட்க விந்தையாக இருந்தாலும் இதுதான் உண்மை.
Mohd Rosli Idris, 2008-ஆம் ஆண்டு தவறான அடையாளம் காரணமாக இறந்தவர் என பதிவுச் செய்யப்பட்டதே அதற்குக் காரணமாகும்.
குடும்பத்துடன் நீண்ட நாட்களாக Rosli தொடர்பில் இல்லாமல் இருந்த காலத்தில், அவரைப் போன்றே முக ஜாடையில் ஆனால் உடல் நலிவுற்று கிடந்த ஓர் ஆடவரை Rosli-யின் முன்னாள் முதலாளி மருத்துவமனையில் சேர்த்தார்.
ஒரு வாரத்தில் அந்நபர் இறந்துவிட, முன்னாள் முதலாளி Rosli-யின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்து விட்டார்.
குடும்பத்தாரும் சடலத்தை அடையாளம் கண்டு, மகனை நல்லடக்கம் செய்து விட்டனர்.
‘இறந்தவர்’ என்பதால் அவரது பெயரும் தேசிய பதிவிலிருந்து நீக்கப்பட்டு விட்டது.
ஆனால், குடும்பத்தை விட்டு தள்ளியிருந்ததால், தம்மைச் சுற்றி நடக்கும் இது எதுவுமே தெரியாமல் Rosli வாழ்ந்து வந்துள்ளார்.
பிறகு, 2014-ல் சொந்த ஊருக்குத் திரும்பியபோது, கிராம மக்கள் அவரை ‘பேய்’ என்று நினைத்து பயந்தோடினர்; பெற்றோரும் ‘இறந்துபோன’ மகன் உயிரோடு நேரில் வந்தது கண்டு திக்குமுக்காடினர்.
அதன்பிறகே உண்மை தெரிந்து Rosli அதிர்ந்துபோனார்.
தேசியப் பதிவுத் துறையான JPN-னை அணுகி புதிய அடையாள அட்டையை எடுக்க Rosli செய்த முயற்சிகள் ஈடேறவில்லை; இறந்து விட்டதாக கணினி முறையில் பதிவுச் செய்யப்பட்டதாகக் கூறி JPN கைவிரித்துவிட்டது.
இதனால், அடையாள அட்டை இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாமல், சிறு வேலைகளில் அவ, வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
இது குறித்து 2023-ல் ஒரு தடவையும் இவ்வாண்டு மீண்டும் போலீஸில் புகார் செய்துள்ளார்.
தற்போதைக்கு, தமக்கு அடையாளமாக இருப்பது அந்த போலீஸ் புகார் மட்டுமே என, Rosli கூறுகிறார்.



