Latestமலேசியா

2025 ஜூலை முதல் நாட்டில் NGV வாகனங்கள் படிப்படியாகக் குறைக்கப்படும் – அந்தோனி லோக்

புத்ராஜெயா, நவம்பர்-4 – NGV எனப்படும் வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு பயன்பாட்டை அரசாங்கம் படிப்படியாகக் குறைக்கவிருக்கிறது.

NGV சக்தியில் இயங்கும் மோட்டார் வாகனங்களை அடுத்தாண்டு ஜூலை 1-ம் தேதியிலிருந்து மலேசியாவில் பதிய முடியாதென, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் அறிவித்துள்ளார்.

அதே தேதி தொடங்கி பெட்ரோனாசும் தனது எண்ணெய் நிலையங்களில் NGV எரிவாயு விற்பனையைக் கட்டம் கட்டமாக நிறுத்துமெனவும் அவர் கூறினார்.

என்றாலும் இந்த மாற்றத்தை எதிர்கொள்ள NGV வாகன உரிமையாளர்களுக்கு அரசாங்கம் உரிய உதவிகளை வழங்குமெனவும் அந்தோனி லோக் குறிப்பிட்டார்.

இதனிடையே சாலைப் பயனர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்புக் கருதி அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைக்கு நாட்டில் 44,383 NGV வாகனங்கள் மட்டுமே இயங்குகின்றன.

அவ்வெண்ணிக்கையானது, மோட்டார் சைக்கிள் தவிர்த்து, ஒட்டுமொத்த மோட்டார் வாகனங்களில் 0.2 விழுக்காடு மட்டுமே.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!