
புத்ராஜெயா, ஏப்ரல்-25, 2025 மார்ச் மாதத்திற்கான கூடுதல் வாக்காளர் பட்டியல், பொது மக்கள் சரிபார்ப்புக்காக மே 23 வரை 30 நாட்களுக்கு பார்வைக்கு வைக்கப்படும்.
அப்பட்டியல் நேற்று முந்தினம் அங்கீகரிக்கப்பட்டு நேற்று அரசுப் பதிவேட்டில் இடம் பெற்றதாக, SPR எனப்படும் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் டத்தோ இக்மால்ருடின் இஷாக் (Datuk Ikmalrudin Ishak) கூறினார்.
அதில் மார்ச் 1 முதல் 31 வரை 18 வயது பூர்த்தியாகி புதிய வாக்காளர்களாக தானியங்கி முறையில் பதிவுச் செய்யப்பட்ட 39,241 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இது தவிர, தேர்தல் தொகுதி மாறிய 9,090 வாக்காளர்கள், வாக்காளர் பிரிவு மாறிய 1,123 பேரின் பெயர்களும் அதிலிருப்பதாக அவர் சொன்னார்.
எனவே மேற்கண்ட பிரிவுகளைச் சார்ந்தவர்கள் மே 23 வரையிலான 1 மாதக் காலக்கட்டத்தில் இந்த கூடுதல் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களையும் விவரங்களையும் சரிபார்த்துக் கொள்ளலாம்.
MySPR Semak செயலி, Hotline தொலைப்பேசி அழைப்புச் சேவை உள்ளிட்ட 5 வழிகளில் பொது மக்கள் அவ்வாறு செய்யலாம் என்றார் அவர்.
ஒருவேளை பெயர்கள் விடுபட்டிருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் SPR இணைய அகப்பக்கத்திற்குச் சென்று C படிவத்தைப் பூர்த்திச் செய்யலாம்.
அல்லது மாநில SPR அலுவலகங்களை நாடலாம்