Latestமலேசியா

2025 SPM தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி திங்கட்கிழமை அறிவிக்கப்படும்

கோலாலம்பூர், மார்ச்-7-2025 SPM தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும்.

கல்வி அமைச்சர் மற்றும் தேர்வு வாரியம் உட்பட சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஆலோசனை நடத்தப்பட்ட பிறகே இந்த அறிவிப்பு வெளியாகும்.

ரமலான் மாதம் மற்றும் ஹரி ராயா காலத்தை கருத்தில் கொண்டு, முடிவுகள் வெளியாகும் வெளியிடும் தேதி கவனமாக தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சு கூறிற்று.

எனவே மாணவர்களும் பெற்றோர்களும் தேதி குறித்த அறிவிப்புக்கு திங்கட்கிழமை வரை காத்திருக்க வேண்டும்.

SPM முடிவுகளை வழக்கம் போல் பள்ளியில் நேரடியாகவும், இணையம் வாயிலாவும் அல்லது SMS மூலம் பரிசோதிக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!