Latestமலேசியா

2026-ல் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு HRD வரி விலக்கு; மொத்தத் தொகை RM35 மில்லியன் – ரமணன்

புத்ராஜெயா, ஜனவரி-15 – தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஜனவரி முதல் டிசம்பர் 2026 வரை மனிதவள மேம்பாட்டு வரி விலக்கு வழங்கப்படுவதாக, மனிதவள மேம்பாட்டுக் கழகமான HRD Corp அறிவித்துள்ளது.

 

இது முதலில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமால் கடந்தாண்டு அறிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்த levi வரி விலக்கு பாலர் பள்ளிகள், பள்ளிகள், தொழிற்பயிற்சி மையங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 3,500-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு பயனளிக்கிறது.

 

மொத்தமாக RM35 மில்லியன் வரிச் சலுகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

_“இந்த நடவடிக்கை கல்வித் துறையை வலுப்படுத்தி, எதிர்கால திறமைகளை உருவாக்கவும், தரமான கல்வி தொடர்ச்சியை உறுதிப்படுத்தவும் உதவும்”_ என மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

 

இவ்வேளையில் “மனிதவள அமைச்சுடன் இணைந்து, தகுதியான கல்வி நிறுவனங்கள் இந்த சலுகையைப் பெறுவதை உறுதிச் செய்வோம்” என HRD Corp தலைமைச் செயல் அதிகாரி Dr. Syed Alwi Mohamed Sultan தெரிவித்தார்.

 

சுருங்கக் கூறின்,

மலேசியாவின் தனியார் கல்வித் துறைக்கு பெரிய ஊக்கமாக, நிதிச் சுமையை குறைத்து தரமான கல்வியை பாதுகாக்கும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!