Latestவிளையாட்டு

2026 உலகக் கோப்பை: 4 நாடுகளின் ரசிகர்களுக்கு தடை விதித்த அமெரிக்கா

லண்டன், ஜனவரி 16 – 2026ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளை அமெரிக்காவில் நேரில் பார்க்க ஈரான், Haiti, Senegal மற்றும் Ivory Coast ஆகிய நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களுக்கு அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் தடை விதித்துள்ளார்.

இதில் ஈரான் மற்றும் Haiti நாடுகளுக்கு முழுமையான பயணத் தடை அமலில் உள்ளது. Senegal மற்றும் Ivory Coast நாடுகள், பகுதி அளவிலான தடையின் கீழ் உள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என டிரம்ப் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

ஹைட்டி மற்றும் ஈரான் அணிகள் தங்களின் அனைத்து குழு போட்டிகளையும் அமெரிக்காவில் விளையாட உள்ளதால், அந்த நாடுகளின் ரசிகர்கள் நேரில் போட்டிகளை பார்க்க முடியாது.

ஆனால், Senegal மற்றும் Ivory Coast அணிகளின் போட்டிகள் கனடாவில் நடைபெறவுள்ளதால் ரசிகர்கள் போட்டிகளை அங்கு சென்று நேரில் பார்க்கலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!