Latestஉலகம்

2026 உலகக் கோப்பை போட்டிகளுக்கு டிக்கெட் தேவை மிக அதிகம்

2026 உலகக் கோப்பை போட்டிகளுக்கு டிக்கெட் தேவை மிக அதிகம்

வாஷிங்டன், பிப்ரவரி 19 –

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 104 போட்டிகளுக்கும் ரசிகர்களின் அபார வரவேற்பு காரணமாக அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டதாக பிபா (Fifa) தலைவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், இறுதி கட்ட விற்பனைக்காக சில டிக்கெட்டுகள் ஏப்ரல் மாதம் முதல் போட்டி நிறைவடையும் ஜூலை 19 வரை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 11 ஆம் தேதியன்று தொடங்கும் காற்பந்து தொடருக்காக நான்கு வாரங்களில் மட்டும் சுமார் 7 மில்லியன் டிக்கெட்டுகளுக்கு 508 மில்லியன் கோரிக்கைகள் வந்துள்ளன. ஜனவரியில் நடந்த முக்கிய விற்பனை கட்டத்தில் 200க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து ரசிகர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

டிக்கெட் விலைகள் உயர்வதற்கு அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள “டைனமிக் விலை” முறை மற்றும் அதிகாரப்பூர்வ மறுவிற்பனை தளங்களில் நடைபெறும் மீள்விற்பனை முக்கிய காரணமென விளக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ இணைந்து நடத்தும் 48 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பை மூலம் பிபாவுக்கு (FIfa-க்கு) சுமார் 11 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சுமார் 7 மில்லியன் ரசிகர்கள் நேரில் போட்டிகளை காண வருவதுடன், 20 முதல் 30 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து, 185,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!