
கோலாலம்பூர், மார்ச்-12-2027 புதியப் பள்ளி பாடத்திட்டத்தின் கீழ், மாணவர்கள் விரைவில் மலேசிய சைகை மொழி, அதாவது Bahasa Isyarat Malaysia-வை கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவர்.
கேட்க முடியாத மற்றும் கேள்வி குறைபாடு உள்ள மாணவர்களுடன் மற்ற மாணவர்கள் எளிதாக தொடர்பு கொள்ள உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
யாரையும் ஒதுக்காமல் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் வகுப்பறைகளை உருவாக்க கல்வி அமைச்சு இந்த முயற்சியை மேற்கொண்டு வருவதாக, துணையமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.
இத்திட்டம் முதலில் PPKI எனப்படும் ஒருக்கிணைக்கப்பட்ட சிறப்புக் கல்வித் திட்டத்தில் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் என்றார் அவர்.
சைகை மொழியை கற்றுக்கொள்வது மாணவர்களுக்கு உணர்வு, புரிதல் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை மதிக்கும் மனப்பான்மையை வளர்க்க உதவும்.
தற்போது சைகை மொழி பெரும்பாலும் சிறப்பு கல்வி வகுப்புகளில் மட்டுமே கற்பிக்கப்படுகிறது.
ஆனால் புதிய பாடத்திட்டம் அதை பொதுப் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்தும்.
இந்நடவடிக்கை மலேசியாவில் அனைவருக்கும் சமமான கல்வி சூழலை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகப் பாராட்டப்படுகிறது.



