Latestமலேசியா

2028ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே நஜீப் விடுதலையாகும் சாத்தியம் உள்ளது – ஷாபி

கோலாலம்பூர், டிச 22 – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்,
42 மில்லியன் ரிங்கிட் SRC வழக்கில் தண்டனை ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்தபோதிலும் , 2028 ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது.

முன்னர் குறிப்பிடப்பட்ட விடுதலை தேதியில், பொதுவாக நல்ல நடத்தை கொண்ட கைதிகளுக்கு வழங்கப்படும் மூன்றில் ஒரு பங்கு தண்டனைக் குறைப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று அவரது முன்னணி வழக்கறிஞரான டான் ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா ( Muhammad Shafee Abdullah ) தெரிவித்தார்.

2028 ஆம் ஆண்டுக்கான விடுதலையின்போது அதன் காலக்கட்டத்தை குறைப்பது குறித்து அவர்கள் சேர்க்கவில்லை. பெரும்பாலும் அவரது விடுதலை முன்கூட்டியே விரைவில் இருக்கலாம். மற்ற வழக்குகள் இன்னும் முடிவு செய்யப்பட உள்ளன என முகமட் ஷாபி கூறினார்.

இதற்கு முன்னதாக, வீட்டுக் காவலில் மீதமுள்ள சிறைத் தண்டனையை அனுபவிக்க நஜீப்பின் விண்ணத்தை உயர் நீதிமன்றம் நிராகரித்ததால் அவர் காஜாங் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே நஜிப் தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 1 MDB நிதியில் 2 பில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான தொகை சம்பந்தப்பட்ட மற்றொரு தனி விசாரணையில் அவர் குற்றவாளியா இல்லையா என்பது குறித்த தீர்ப்பு வெள்ளிக்கிழமை அவருக்கு தெரியவரும்.

1MDB வழக்கில் 25 குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், நஜிப் கூடுதல் சிறைத்தண்டனையை எதிர்நோக்குவார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!