Latestமலேசியா

2030 முதல் புக்கிட் தாகாரில் பன்றி வளர்ப்பை மையப்படுத்தும் சிலாங்கூர்

ஷா ஆலாம், ஜனவரி-9,

சிலாங்கூர் மாநில அரசு, பன்றி வளர்ப்பு தொழில்துறையை 2030 முதல் உலு சிலாங்கூரின் புக்கிட் தாகாரில் மையப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்காக 202 ஹெக்டர் நிலம் ஒதுக்கப்பட்டு, நவீன closed system முறையில், தூய்மைக்கேடு இல்லாமல், சுகாதாரத்துடன் பன்றிப் பண்ணைகள் அமைக்கப்படவுள்ளன.

தற்போது தஞ்சோங் செப்பாட்டில் செயல்படும் 112 பண்ணைகள், மேலும் 3 ஆண்டுகள் இயங்க அனுமதிக்கப்பட்டு பின்னர் புதிய இடத்திற்கு மாற்றப்பட வேண்டும்.

இந்நடவடிக்கை உணவு பாதுகாப்பை மேம்படுத்தவும், தூய்மைக்கேட்டைக் கட்டுப்படுத்தவும், சமூக ஒற்றுமையை உறுதிச் செய்யவும் மேற்கொள்ளப்படுவதாக, கட்டமைப்பு வசதி மற்றும் விவசாயத் துறைகளுக்கான மநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ Dr Izham Hashim தெரிவித்தார்.

தவிர, நோய் பரவல் அபாயத்தை குறைத்து, முஸ்லீம் அல்லாத சமூகத்திற்கான பன்றி இறைச்சி விநியோகத்தை நிலைநிறுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

கடந்த ஜூலை மாதம் முதல், சரவாக் மற்றும் பேராக் மாநிலங்களில் இருந்து 2,000 உயிர் பன்றிகளை கடுமையான SOP நடைமுறைகளின் கீழ் இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த புக்கிட் தாகார் திட்டம், சிலாங்கூரில் பன்றி வளர்ப்பை நவீனமாகவும் ஒழுங்குமுறையாகவும் மாற்றும் முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!