
கோத்தா பாரு, செப்டம்பர் -11 – கிளந்தான், கோத்தா பாருவில் பிரசவத் தாய்மார்களைப் பராமரிக்கும் மையத்தில், தாதி கொடுத்த புட்டிப் பாலை அருந்திய 30 நாள் குழந்தை திடீரென இறந்து போனது.
திங்கட்கிழமை மாலை அச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
புட்டிப் பால் குடித்ததும் அந்த ஆண் குழந்தை சுயநினைவற்ற நிலையில் இருந்ததால், கோத்தா பாரு மருத்துவ மையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது.
பரிசோதனையில், குழந்தை உயிரிழந்து விட்டது அங்கு உறுதிச் செய்யப்பட்டது.
இதையடுத்து 20 வயது தாதி விசாரணைக்காகக் கைதாகியுள்ளார்.
அவரை தடுத்து வைக்க இன்று நீதிமன்ற ஆணைப் பெறப்படவிருக்கிறது.
2001 சிறார் சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.