
கோலாலம்பூர், ஜனவரி-27-மலேசியாவில் மாசடைந்த ஆறுகளின் எண்ணிக்கை இரண்டே ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்தாண்டு 33 ஆறுகள் மாசடைந்ததாக வகைப்படுத்தப்பட்டன; இவ்வெண்ணிக்கை 2023-ல் 25-தாக மட்டுமே இருந்ததாக, இயற்கை வளங்கள் மற்றும்
சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான அமைச்சு கூறியது.
2019-ல் 59-தாக இருந்த எண்ணிக்கைப் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், 2023-க்குப் பிறகு மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.
நாட்டில் மொத்தமாக 486 ஆறுகள் தூய்மையானவை; 171 ஆறுகள் சிறிதளவு மாசடைந்தவையாகும்.
ஆனால் 33 ஆறுகள் மூன்றாம், நான்காம் கட்ட தூய்மைக் கேட்டு அளவைக் கொண்டுள்ளன.
என்றாலும், மிக மோசமான அளவான ஐந்தாம் கட்டத்தில் எந்த ஆறுகளும் இல்லை என அமைச்சு கூறிற்று.



