
3.89-டைத் தொட்ட ரிங்கிட்; 8 ஆண்டுகளில் புதிய உச்சம்
கோலாலம்பூர், பிப்ரவரி-13,
மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து சாதனைப் படைத்து வருகிறது.
நேற்றைய பரிவர்த்தனையில் ஒரு அமெரிக்க டாலருக்கு எதிராக 3.8995 என்ற நிலையை ரிங்கிட் எட்டியது.
இது கடந்த 8 ஆண்டுகளில் பதிவான உச்ச நிலைக்கு சமமாகும்.
இந்த உயர்வுக்கு, மலேசியாவின் வலுவான பொருளாதார தரவுகளே காரணம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக, நான்காம் காலாண்டு உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (GDP) 5.7% வளர்ச்சி கண்டுள்ளது.
அதேசமயம், அமெரிக்க டாலரும் பலவீனமடைந்துள்ளது.
ரிங்கிட், ஜப்பானின் யென், யூரோ, பிரிட்டிஷ் பவுண்ட், இந்தோனேஷியா ரூபியா, சிங்கப்பூர் டாலர் ஆகியவற்றுக்கு எதிராகவும் வலுவடைந்துள்ளது.
ஆனால் தாய்லாந்து பாத் மற்றும் பிலிப்பின்ஸ் பெசோவுக்கு எதிராக சற்றே பலவீனமடைந்தது.
என்றாலும் மொத்தத்தில், ரிங்கிட் தற்போது வலுவான பாதையில் உள்ளது.
இது மலேசிய பொருளாதாரத்தின் மீது உலகச் சந்தையின் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக பொருளாத நிபுணர்கள் கூறுகின்றனர்.



