
செர்டாங், பிப்ரவரி-14 – Air Asia விமானத்திலிருந்து ஞாயிறன்று வெளியேற்றப்பட்ட தைவானிய ஜோடியை போலீஸ் கைதுச் செய்துள்ளது.
மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இருவருக்கும் மனநல பாதிப்பேதும் இல்லையென உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து அதே நாளில் அவர்கள் கைதானதாக, KLIA போலீஸ் துணைத் தலைவர் Albany Hamzah கூறினார்.
குற்றவியல் சட்டம் மற்றும் சிறு சிறு குற்றங்களுக்கான சட்டத்தின் கீழ் விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சீனாவுக்கான Air Asia விமானத்திலிருந்த போது அவ்விருவரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல் நடந்துகொண்டு, மற்ற பயணிகளுக்கு இடையூறை ஏற்படுத்தினர்.
இதையடுத்து விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, நேரடியாக KLIA போலீஸ் தலைமையகம் கொண்டுச் செல்லப்பட்டனர்.
எனினும் அங்கு போலீஸாரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருவரும் மூர்க்கத்தனமாக நடந்துக்கொண்டனர்.
அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகித்த போலீஸ், உடனடியாக மருத்துவக் குழுவை வரவழைத்தது;
அவர்கள் வந்து பரிசோதித்து விட்டு அந்த தைவானிய ஜோடிக்கு மருந்து கொடுத்து ஆசுவாசப்படுத்தினர்.