Latestஅமெரிக்காஉலகம்

48 மணி நேரத்தில் ‘நரகத்தைப் பார்ப்பீர்’: Hormuz நெருக்கடியில் ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

வாஷிங்டன், ஏப்ரல்-5-அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது.

“48 மணி நேரத்திற்குள் Hormuz நீரிணையைத் திறக்கவில்லை என்றால், பெரும் தாக்குதல் நடக்கும்” என அதிபர் டோனல்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

“அமைதி ஒப்பந்தத்திற்கு உடன்படவோ அல்லது Hormuz நீரிணையைத் திறந்து விடவோ ஈரானுக்கு 10 நாட்கள் கால அவகாசம் வழங்கினேன். தற்போது எஞ்சியிருப்பது 2 நாட்கள் மட்டுமே. இன்னும் பிடிவாதம் காட்டினால் 48 மணி நேரம் முடியும் போது ஈரான் ‘நரகத்தை’ பார்க்க வேண்டி வரும்”, என ட்ரம்ப் கடுமையாக எச்சரித்தார்.

ஈரான் கேட்டுக் கொண்டதற்கிணங்க கால அவகாசத்தை நீட்டித்ததாக மார்ச் 26-ஆம் தேதி ட்ரம்ப் அறிவித்தாலும், வாஷிங்டனுடன் பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என தெஹ்ரான் தொடர்ந்து கூறி வருகிறது.

இந்நிலையில், ட்ரம்பின் இந்த ஆகக் கடைசி எச்சரிகை பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Hormuz நீரிணை, உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையாகும்.

உலகின் சுமார் 20 விழுக்காடு எண்ணெய் இந்த வழியாகத் தான் செல்கிறது.

இந்நிலையில், அமெரிக்காவுடனான போரால் இந்த பாதை மூடப்பட்டதால்,
உலகளாவிய எண்ணெய் விலை உயர்வும், பொருளாதார பாதிப்பும் மோசமடைய வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

இப்போது, அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்குமோ? என்பதே உலக நாடுகளின் கவலையாக உள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!