Latestஉலகம்

5 நாட்களில் ஜி20 உச்சநிலை மாநாட்டை வைத்துக் கொண்டு பிரேசில் உச்ச நிதிமன்றத்தில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்

சாவோ போலோ, நவம்பர்-14 – பிரேசில் நாட்டின் உச்ச நீதிமன்ற கட்டடத்தினுள் நுழைய முயன்ற ஆடவன், மனித வெடிகுண்டாக மாறி தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

புதன்கிழமை மாலை நீதிமன்ற கார் நிறுத்துமிடமருகே முதல் வெடிப்பு ஏற்பட்டது.

சில வினாடிகள் கழித்து நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே பயங்கர சத்தத்துடன் இரண்டாவது வெடிப்பு ஏற்பட்ட இடத்தில், உடல் சிதறிய ஆடவனின் சடலம் கண்டெக்கப்பட்டது.

அடுத்தடுத்து வெடிப்புகள் நிகழ்ந்ததால், உச்ச நீதிமன்றமே உடனடியாக காலி செய்யப்பட்டது.

நீதிபதிகளும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

குண்டு வெடித்த நீதிமன்ற வளாகம், பிரேசில் அதிபர் மாளிகைக்கு அருகிலேயே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் வெடிப்புக்கு சில நிமிடங்கள் முன்பாகவே அதிபர் Luis Inacio Lula da Silva அங்கிருந்து கிளம்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த தென்னமிக்க நாட்டில் இன்னும் ஐந்தே நாட்களில் ஜி20 நாடுகளின் உச்சநிலை மாநாடு நடைபெறவிக்கும் நிலையில், இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரியோ டி ஜெனிரோவில் ஜி20 மாநாட்டில் உலகத் தலைவர்கள் பங்கேற்றப் பிறகு, தலைநகர் பிரேசிலியாவுக்கு சீன அதிபர் Xi Jinping அரசு முறைப் பயணமாக வரவிருக்கிறார்.

எனவே வரலாறு காணாத உச்சக்கட்ட பாதுகாப்புக்கு அந்நாட்டரசு உத்தரவிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!