Latestமலேசியா

5 வயதில் மலேசிய சாதனை புத்தகத்தில் தேவக்ஷீன்; பெற்றோர்கள் பெருமிதம்

கோலாலம்பூர், ஆகஸ்ட்-1 – 2019 ஆம் ஆண்டு பிறந்து, விண்வெளி வீரராக வேண்டும் என்ற ஆசையுடன் வளர்ந்து வரும், 5 வயது 10 மாதங்கள் மட்டுமே நிரம்பிய நெகிரி செம்பிலானைச் சேர்ந்த Devakshean Devakumaran, வெறும் 1 நிமிடத்தில் 65 நாணயங்களை அடையாளம் கண்டு மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

அதே நேரத்தில் 200 நாடுகளின் நாணயத்தை குறிப்பிட்ட நேரத்தில் அடையாளம் கண்டு அவர் British உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.

Devaksheanனுக்கு 1 வயதாக இருக்கும்பொழுதே, என்றோ ஒரு நாள் தொலைபேசியில் காட்டிய தேசியக்கொடியை, பல நாட்கள் ஆன பிறகும் Devakshean துல்லியமாக கண்டறிந்தது பார்த்த பெற்றோர் தேவமலர் மற்றும் தேவகுமாரன் வியப்படைந்துள்ளனர்.

தீட்ட தீட்டதான் கத்தி கூர்மைபெறும். அந்த வகையில் தன் குழந்தையின் திறனை கண்டறிந்த பெற்றோர்கள், அவருக்கு பல பயிற்சிகளை வழங்க தொடங்கினர்.
அதன் விளைவு, 2022 ஆம் ஆண்டு 241 கொடிகளின் பெயரை குறிப்பிட்டு சொல்லி Jackhi மற்றும் Cholan சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்,

அதுமட்டுமா, கடந்தாண்டு 1 நிமிடம் 45 வினாடிகளில் 195 நாடுகளின் கொடிகளை துல்லியமாக அடையாளம் கண்டு அதிகாரப்பூர்வ உலக சாதனை, Hope சர்வதேச சாதனை மற்றும் அற்புதமான மலேசியா சாதனை புத்தகத்திலும் (Amazing Malaysia Book of Records ) அவர் பெயர் பதித்தார்.

இந்த சிறு வயதிலே சாதனை புரிந்துள்ள Devakshean நிச்சயமாக வருங்காலத்தில் இன்னும் பல சாதனகள் புரிந்து நம் சமுகத்தின் அடையாளமாக திகழ்வார் என்பது திண்ணம். அவ்வகையில் அவரின் தொடர் வெற்றிக்கு அவருக்கும் அவரது பெற்றோருக்கும் நமது மனமார்ந்த வாழ்த்துகள் !

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!