
மாஸ்கோ, ஆகஸ்ட் 4 – கடந்த புதன்கிழமை, கிழக்கு ரஷ்யாவிலுள்ள ‘க்ராஷென்னினிகோவ்’ (Krasheninnikov) எரிமலை 500 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக வெடித்துள்ளது.
இது கடந்த வாரத்தில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்.
எரிமலை வெடிப்பிற்குப் பிறகு, ஆறு கிலோமீட்டர் உயரம் வரை சாம்பல் புகை வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
இந்த ரஷ்ய எரிமலை கடந்த 15 ஆம் நூற்றாண்டில் இறுதியாக வெடித்தது என்றும் அதன்பிறகு சென்ற வாரம்தான் வெடிப்பு ஏற்பட்டது என்றும் கம்சட்கா எரிமலை வெடிப்பு குழு குறிப்பிட்டது.
இருப்பினும், அப்பகுதி மக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இனி இல்லை என்றும் அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பலாம் என்றும் ரஷ்யாவின் அவசரகால அமைச்சு தெரிவித்துள்ளது.