
ஜோர்ஜ் டவுன், ஏப் 14 – பினாங்கு சுப்ரமணிய பாரதி தமிழ்ப் பள்ளியின் 50 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி அண்மையில் பினாங்கு மாநகராட்சி விளையாட்டரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பாலர் பள்ளியைச் சேர்ந்த 80 மழலையர்களுடன் , முதல் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையிலான 423 மாணவர்களும் இந்த விளையாட்டுப் போட்டியில் மிகவும் ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் கலந்துகொண்டனர்.
மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிருபிக்கும் வகையில் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், கோப்பைகள்,பரிசுகள் மற்றும் நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்த போட்டி விளையாட்டிற்கு பினாங்கு நகராட்சி மன்ற உறுப்பினர் விஸ்வநாதன் தங்கவேலு சிறப்பு வருகை புரிந்தது நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பைத் தந்தது.
சிவப்பு , மஞ்சள், பச்சை, நீலம் என அனைத்து இல்லங்களை சேர்ந்த பேரணிகளும் திறமையாகவும், முழு ஆளுமையுடனும் தங்கள் இல்ல அணிவகுப்பை நடத்தியது இப்போட்டியைக் காண வந்திருந்த அனைவரின் பாராட்டையும் பெற்றது.



