Latestமலேசியா

58ஆவது தேசிய வகை தும்போக் தோட்ட தமிழ்ப்பள்ளியின் போட்டி விளையாட்டிற்கு உதவி கரம் நீட்டிய மலேசியா Legendary Riders கழகம்

தஞ்சோங் சிப்பாட், செப்டம்பர் 10 – கடந்த செப்டம்பர் 8ஆம் திகதி, தேசிய வகை தும்போக் தோட்ட தமிழ்ப்பள்ளியின் போட்டி விளையாட்டிற்கு, மலேசிய Legendary Riders கழகம் உதவிக் கரம் நீட்டியுள்ளது.

அப்பள்ளியின் தலைமையாசிரியரின் வேண்டுகோளுக்கிணங்க, 58ஆவது முறையாக நடைபெறும் போட்டி விளையாட்டிற்கு நிதி உதவியும் பரிசுகளையும் ஏற்பாடு செய்துள்ளது இந்த மோட்டர் சைக்கிள் ஓட்டுநர்களின் கழகம்.

போட்டி விளையாட்டு அன்று, அக்கழகத்தின் தோற்றுநரும் தலைமை இயக்குநருமான Magendramani Raghavan தலைமையில் அந்நிகழ்ச்சி அதிகாரப்பூர்வமாக தொடக்கம் கண்டது.

மிகவும் கோலாகலமாக 150 பேருக்கு மேல் ஒன்றுகூடி நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, இக்கழகத்தின் 20 பிரதிநிதிகளும் பரிசுகளை வழங்கி கெளரவித்திருக்கின்றனர்.

மிகச் சிறந்த முறையில் இப்போட்டி விளையாட்டை ஏற்பாடுச் செய்த அப்பள்ளியின் தலைமையாசிரியர் கஸ்தூரி ராமச்சந்திரன், பள்ளி வாரிய உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பெற்றோர்கள் என ஆதரவு அளித்த அனைவருக்கும் மலேசிய Legendary Riders கழகம் சார்பாக அதன் தலைவர் வாழ்த்தும் பாராட்டு தெரிவித்துக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!