
அடுத்தாண்டு முதல் 6 வயது குழந்தைகளும் முதலாம் வகுப்பில் நுழையலாம் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பு வரவேற்கக் கூடியது என்கிறார், தனியார் பாலர் பள்ளி நிறுவனமான Sunshine கல்விக் குழுமத்தின் இணை நிறுவனரும் மூத்த தலைமையாசிரியருமான பரமேஸ்வரி மனோகரன்.
பல நாடுகளில் இது அமுலில் உள்ள ஒன்றுதான் என அவர் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.
6 வயது மாணவர்களை முதலாமாண்டில் பதியும் நடவடிக்கைகள் கடந்த மாதம் தொடங்கிய குறுகிய காலத்திலேயே 50,000 மாணவர்கள் பதிந்துள்ளனர்.
இது பெற்றோர்களிடையே காணப்படும் வரவேற்பையும் ஆர்வத்தையும் காட்டுவதாக அவர் சொன்னார்.
அதே சமயம், 6 வயது குழந்தைகளை முதலாமாண்டில் சேர்க்க விரும்பும் முன், சமூகத் திறன் மற்றும் தொடர்பு திறன் என 2 முக்கிய விஷயங்களைப் பெற்றோர்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
வீட்டிலிருந்த பிள்ளைகள் வெளியுலகிற்குச் செல்லும் போது அதனை எதிர்கொள்ளும் தயார் நிலையைப் பெற்றிருப்பதை பெற்றோர்கள் உறுதிச் செய்ய வேண்டுமென பரமவேஸ்வரி வலியுறுத்துகிறார்.
பள்ளிப் படிப்பு என்பது வெறும் ஏட்டுக் கல்வி அல்ல; மாறாக அதையும் தாண்டி தனிப்பட்ட வாழ்க்கைக் கற்றலாகும்;
சிற்றுண்டிச் சாலையில் உணவு வாங்குவதிலிருந்து, சொந்தத் தேவைகளை சுயமாக பூர்த்திச் செய்வது வரை அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்கிறார் இவர்.
அதற்கு உதாரணமாக, இவரின் Sunshine பாலர் பள்ளியில் கூட 3 முதல் 4 வயது பிள்ளைகளை வேறு வகையிலும், 5 முதல் 6 வயது மாணவர்வகளை வேறு விதமாகவும் இவர்கள் கையாள்கிறார்கள்.
வணிக ரீதியாகப் பார்த்தால், அரசாங்கத்தின் இவ்வறிவிப்பு தனியார் பாலர் பள்ளிகளுக்கு பெரிய பாதிப்பு தான் என்பதை பரமேஸ்வரி ஒப்புக் கொள்கிறார்.
ஆனால், வணிகம் என்று வந்து விட்ட பிறகு மாற்றுத் திட்டங்களை வைத்திருக்கத் தான் வேண்டும்.
அவ்வகையின் இவரின் Sunshine குழுமத்திடமும் மாற்றுத் திட்டங்கள் தயாராக உள்ளன.
6 வயதில் முதல் வகுப்பில் நுழைவதை ஊக்குவிக்கும் அரசாங்கத்திடம் ஒரு தனியார் பாலர் பள்ளி நடத்துநர் என்ற முறையில் நீங்கள் முன்வைக்க விரும்பும் கோரிக்கை என்னவென்று கேட்டதற்கு, பரமேஸ்வரி கூறும் பதில்…
அடுத்தாண்டு முதல், விருப்ப அடிப்படையில் பாலர் கல்வி 5 வயதிலும் முதல் வகுப்பு 6 வயதிலும் தொடங்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதிகமான மாணவர் சேர்க்கையைச் சமாளிக்க, கல்வி அமைச்சு 20,000 ஆசிரியர்களை நியமித்து, புதிய வகுப்புகளைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளது.



