
ஜெலபு, ஆகஸ்ட்-7 – நெகிரி செம்பிலான், பஹாவ், ரொம்பினில் கடந்த மாதம் தனது 6 வயது மகனைக் கொலைச் செய்ததாக, 36 வயது தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜெலபு மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 36 வயது எம். அருண்குமார் மீது குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
எனினும், கொலைக் குற்றம் உயர் நீதிமன்ற அதிகாரத்தின் கீழ் வருவதால், அவரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.
இதையடுத்து செம்டப்பர் 10-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருமென நீதிமன்றம் அறிவித்தது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது அதிகபட்சம் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
ஜோகூர் பாரு, தாமான் புக்கிட் இண்டாவில் ஜூலை 24-ல் காணாமல் போனதாகக் கூறப்பட்ட திஷாந்த், 4 நாட்கள் கழித்து ஜெம்போலில் புதைக்கப்பட்ட நிலையின் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டான்.
திஷாந்தின் தந்தை கைதானதை அடுத்து, அவ்விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
திஷாந்த், கேபிள் கம்பியால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டது சவப்பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.