
இஸ்கண்டார் புத்ரி, ஆகஸ்ட்-1- ஜோகூரைச் சேர்ந்த 6 வயது சிறுவன் திஷாந்த் நெகிரி செம்பிலான், ரொம்பினில் கொலையுண்டு புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேக நபரான அவனது தந்தை ஜெம்போல் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இஸ்கண்டார் புத்ரி போலீஸ் தலைவர் எம். குமராசன் அதனைத் தெரிவித்தார்.
‘மகன் காணாமல் போனதில்’ அலட்சியமாக இருந்தது, போலி புகார் செய்தது ஆகியவற்றுக்காக ஜூலை 25 முதல் அவ்வாடவர் தடுத்து வைக்கப்பட்டார்.
தடுப்புக் காவல் நேற்றோடு முடிவடைந்ததால், மகனின் கொலை தொடர்பான மேல் விசாரணைக்காக 36 வயது அந்நபர் நெகிரி மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
புக்கிட் இண்டாவில் ஜூலை 23-ஆம் தேதி மகன் காணாமல் போனதாக அந்நபர் முதலில் போலீஸில் புகார் செய்தார்.
4 நாட்கள் கழித்து ரொம்பில் புதர்ப்பகுதியில் திஷாந்தின் புதைக்கப்பட்ட சடலம் கண்டெடுக்கப்பட்டது.
கேபிள் கம்பியால் திஷாந்த் கழுத்து நெரிக்கப்பட்டு கொலையுண்டது சவப்பரிசோதனையில் தெரிய வந்தது.
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கொலைச் சம்பவமாக வகைப்படுத்தப்பட்டு விசாரணை வேகமெடுத்துள்ளது.