
சிரம்பான், அக் 7 –
ஒரு நிறுவனத்திற்குச் சொந்தமான 62 செம்புக் கட்டிகளைக் கொள்ளையடித்த குற்றத்தை மூவர் மறுத்தனர்.
சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி டத்தின் சுரிதா புடின் (Datin Surita Budin) முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது 34, 50 மற்றும் 24 வயதுடைய அம்மூவரும் குற்றச்சாட்டை மறுத்தனர்.
ஒரு நிறுவனத்திற்கு எதிராக செப்டம்பர் 27 ஆம் தேதியன்று நீலாய், ஜலான் சிரம்பான் – புக்கிட் நெனாஸ் நெடுஞ்சாலையில் மாலை ஆறு மணியளவில் அவர்கள் அந்த கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டனர்.
கூடியப்பட்சம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, அபராதம் மற்றும் பிரம்படி விதிக்கப்படும். தண்டனைச் சட்டத்தின் 395 ஆவது பிரிவின் கீழ் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
அவர்கள் ஒவ்வொருவரும் மாதம் ஒருமுறை அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன், 15,000 ரிங்கிட் ஜாமின் வழங்க நீதிமன்றம் அனுமதித்தது.
அவர்கள் மீதான வழக்கு நவம்பர் 10 ஆம்தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் .