Latestமலேசியா

65-ஆவது ஆண்டு விழா: சுற்றுப் பயணம் மூலம் ஊடகங்களைக் கொண்டாடிய LBS

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்-9-நாட்டின் முன்னணி சொத்துடைமை மேம்பாட்டு நிறுவனமான LBS Bina Group Berhad, தனது 65-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, ஊடகப் பிரதிநிதிகளுக்கான பாராட்டு சுற்றுப்பயணத்தை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.

ஏப்ரல் 4 முதல் 5 வரை, பஹாங், ரவூப்பில் Bilut Hills Eco Resort-ல் நடைபெற்ற இந்த 2-நாள் நிகழ்ச்சியில் சுமார் 18 ஊடகத்தினர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ATV சவாரி, flying fox, அம்பெய்துதல், கரோவோக்கே போட்டி உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு நடவடிக்கைகள் இடம்பெற்றன.

தவிர, Musang King டுரியான் பழங்களையும் பங்கேற்பாளர்கள் ஆசைத் தீர சுவைத்தனர்.

இம்முயற்சி, வழக்கமான பாராட்டைத் தாண்டி, ஊடகங்களுடன் உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டதாக, LBS தொடர்புப் பிரிவு தலைவர் Norazian Abdul Aziz தெரிவித்தார்.

ஊடகங்கள், நிறுவன தகவல்களை மக்களிடம் கொண்டுசேர்க்கும் முக்கிய பாலமாக செயல்படுகின்றன என்றும் அவர் பாராட்டினார்.

இவ்வேளையில், நிர்வாக இயக்குநர் Cynthia Lim பேசுகையில், ஊடகங்களின் தொடர்ந்து ஆதரவு LBS குழுமத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருப்பதாக தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!