Latestமலேசியா

7 நாட்களில் 12 மலைகள்; இரண்டாவது மலேசிய சாதனைக்கு குறிவைக்கும் லோகசந்திரன்

கோலாலாம்பூர், மார்ச்-31-கடந்தாண்டு 7 நாட்களில் 9 மலைகளை ஏறி, மலேசிய சாதனை புத்தகத்தில் (Malaysia Book of Records) இடம் பிடித்த இளைஞர் லோகசந்திரன் ராமசந்திரன், அடுத்த துணிகர முயற்சிக்குத் தயாராகியுள்ளார்.

இம்முறை, நாட்டின் 69-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 7 மாநிலங்களில், 7 நாட்களில் 12 மலைகளை ஏற அவர் திட்டமிட்டுள்ளார்.

வரும் ஆகஸ்ட் 25 முதல் 31 வரை சுமார் 60–70 மணி நேரம் மொத்த நடைபயணத்தை இது உட்படுத்தியுள்ளது. ஜோகூரின் Gunung Ledang மலையில் தொடங்கும் இம்முயற்சி, பேராக், Gunung Kerunai-யில் இது முடிவுக்கு வரவிருக்கிறது.

கடந்தாண்டு லோகசந்திரனின் சாகச பயணத்தை தொடர்ச்சியாக, விரிவாக வெளியிட்டு மக்களிடம் அவரை வணக்கம் மலேசியா கொண்டுசேர்த்தது.

இந்நிலையில், ஒற்றுமை, பொறுமை, மற்றும் தேசப்பற்று ஆகியவற்றின் அடையாளமாக தாம் முன்னெடுக்கும் இந்த இரண்டாவது சாதனைப் பயணம் குறித்து, அவர் வணக்கம் மலேசியாவுக்கு சிறப்பு பேட்டியளித்தார்.

முந்தைய மலேசிய சாதனைக்கு மக்களிடத்தில் பெரும் வரவேற்புக் கிடைத்ததாகக் கூறிய லோகசந்திரன், பள்ளிகள், பல்கலைக் கழகங்கள் கூட தம்மைத் தொடர்புகொண்டு தன்முனைப்பு பேச்சுக்கு அழைப்பு விடுத்த தகவலை பகிர்ந்துகொண்டார்.

இந்தக் காலக்கட்டத்தில், Urban Hikers என்ற மலையேறும் கிளப்பொன்றையும் அவர் தொடங்கியுள்ளார்.

மலையேறுவது தொடர்பான tips-களை ஆர்வமுள்ள மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதுமே இதன் நோக்கமாகும்.

அதில் சேர விரும்புவோர் Urban Hikers (@urbanhikersadventureclub) இன்ஸ்டாகிரம் பக்கத்தில் மேல் விவரங்களைப் பெறலாம்

ஒரு பொழுதுபோக்காகத் தொடங்கியதில் இன்று தீவிரம் காட்டினாலும், வேலை – மலையேறுதல் இரண்டுக்கும் இடையில் சமச்சீரான நேரத்தை இவர் ஒதுக்கிகொள்கிறார்.

தனது எதிர்கால திட்டங்களில், Unity Record அதாவது பல்லின மக்களையும் இணைத்துகொண்டு மலையேறுதலில் புதிய மலேசிய சாதனை குறித்து அவர் அவ்விளக்கம் அளித்தார்.

முதல் முயற்சிக்கு கொடுத்த அதே வற்றாத ஆதரவை, இந்த இரண்டாவது மலேசிய சாதனை முயற்சிக்கும் அனைத்து மலேசியர்களும் வழங்குவார்கள் என லோகசந்திரன் நம்பிக்கைத் தெரிவித்தார்.

கோவிட் காலத்தில் பொழுதுபோக்காக தொடங்கிய இந்த இளைஞரது முயற்சி, மலேசியாவின் இயற்கை அழகையும், மலைப் பாரம்பரியத்தையும் உலகிற்கு அறிமுகப்படுத்துவதோடு, இளைஞர்களை ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும், சாகசத்திற்கும் ஊக்குவிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

தன்னம்பிக்கைக்கும், விடாமுயற்சிக்கும் மறுபெயராக விளங்கும் லோகசந்திரனின் இந்த சாதனை முயற்சிக்கு துணை நிற்க வேண்டியது நமது கடமையாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!