Latestஇந்தியாஉலகம்

7 நாட்கள் 170 மணிநேரம் பரத நாட்டியம் இந்திய மாணவி ரெமோனா உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்

மங்களூரு , ஜூலை 30- இந்தியா, Mangaluruவைச் சேர்ந்த கல்லூரி மாணவி ரெமோனா ஈவிட்டே பெரைரா ( Remona Evette Pereira ) 7 நாட்கள் தொடர்ச்சியாக 170 மணி நேரம் பரத நாட்டியம் ஆடி Golden Book Of World Records உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

கல்லூரி மாணவியான 22 வயதுடைய Remonaவின் இந்த சாதனையை அங்கீகரித்து ஜூலை 28 ஆம்தேதி Golden Book Of World Records பிரதிநிதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்து அவரை கௌரவப்படுத்தினர்.

இந்த சாதனையின் வழி Remona , இந்திய நடனக் கலைஞர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியதோடு நீண்ட நேரம் பரத நாட்டியம் ஆடிய கலைஞராக உலகில் முத்திரை பதித்துள்ளார்.

இதற்கு முன் 2023ஆம் ஆண்டு இந்தியாவின் Latur ரைச் சேர்ந்த 16 வயது பரதக் கலைஞர் Sudhir Jagpat தொடர்ந்து 127 மணி நேரம் பரதம் ஆடி ஏற்படுத்திய சாதனையை இப்போது Remona முறியடித்துள்ளார்.

ஜூலை 21 ஆம்தேதி தொடங்கி ஜூலை 28 ஆம்தேதிவரை தனது கல்லூரி அரங்கில் தொடர்ந்து 170 மணி நேரம் பரத நாட்டியம் ஆடி ரெமோனா அசத்தியுள்ளார்.

ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை 15 நிமிடம் மட்டுமே ஓய்வு எடுத்துக் கொண்டு அவர் ஏற்படுத்திய இந்த சாதனையை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களில் பலரும் பாராட்டியுள்ளனர்.

கலை மற்றும் கலாச்சாரத்தில் தனக்கு இருந்த ஆர்வத்தினால் இந்த சாதனையை செய்துள்ள Remona கடந்த 13 ஆண்டுகளாக பரத நாட்டியத்துறையில் ஏற்கனவே பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!