மோஸ்கோவ், செப்டம்பர் -17, ரஷ்யாவில் அமெச்சூர் தோட்டக்காரரான Alexander Chusov என்பவர் 817 கிலோ கிராம் எடை கொண்ட இராட்சத பரங்கிக்காயை பயிரிட்டு அறுவடை செய்துள்ளார்.
ரஷ்யாவின் பழைமையான தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற இலையுதிர் கால விழாவில் இராட்சத காய்கறிகளுக்கான போட்டியில் அச்சாதனை உறுதிச் செய்யப்பட்டது.
இதற்கு முன் அந்நாட்டில் அறுவடை செய்யப்பட்ட ஆகப் பெரிய பரங்கிக்காயின் எடை 771 கிலோ கிராமாகும்.
இதையடுத்து ரஷ்யாவில் பயிரிடப்பட்டு அறுவடையான ஆகப் பெரிய பரங்கிக்காயாக அவரின் பரங்கிக்காய் பெயர் பதித்துள்ளது.
தான் நட்ட பரங்கியின் எடை, இவ்வாண்டு மட்டுமே ஒவ்வொரு நாளும் 20 கிலோ கிராம் அதிகரித்ததாக Chusov சொன்னார்.
மண்ணையும் காற்றையும் சூடேற்றி, தாவரங்களை மூடி, உறைபனியிலிருந்து முறையாகப் பாதுகாத்து வந்ததே, எனது இராட்சத பரங்கிக்காயின் எடைக்குக் காரணம்.
கடின உழைப்பும் கவனிப்பும் கட்டாயமென்றாலும், தம்மைப் பொறுத்தவரை அதுவொரு மகிழ்ச்சிகரமான பொழுதுபோக்கு என்கிறார் Chusov.