செர்டாங், செப்டம்பர் -22, சிலாங்கூர் ஸ்ரீ கெம்பாங்கானில் 9 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்திய சந்தேகத்தின் பேரில், 35 வயது வெளிநாட்டு ஆடவன் கைதாகியுள்ளான்.
தனது தந்தை வேலை செய்யுமிடத்திற்கு அருகில் இரவு 11 மணி வாக்கில் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த அச்சிறுமியை நெருங்கிய சந்தேக நபர், அவளை மானபங்கம் செய்துள்ளான்.
அவனைச் சோதனையிட்டதில், ஆபாச படங்ளையும் வீடியோக்களையும் வைத்திருந்தது அம்பலமானது.
அவனிடம் முறையான பயணப் பத்திரமும் இல்லையென, செர்டாங் போலீஸ் தலைவர் AA அன்பழகன் தெரிவித்தார்.
செப்டம்பர் 27 வரை விசாரணைக்காக அவன் தடுத்து வைக்கப்படவுள்ளான்.