
கலிஃபோர்னியா, மார்ச்-7-பிரபல போலிவூட் மற்றும் ஹோலிவூட் நட்சத்திரமான பிரியங்கா சோப்ரா ஜோனஸ், 98-ஆவது ஆஸ்கார் விருதளிப்பில் மீண்டும் விருதுகளை எடுத்து வழங்குகிறார்.
மார்ச் 15-ஆம் தேதி லோஸ் ஏஞ்சலஸில் உள்ள டோல்பி தியேட்டரில் நடைபெறும் இந்த விருது விழாவை நகைச்சுவை நடிகர் Conan O’Brien தொகுத்து வழங்குகிறார்.
ABC தொலைக்காட்சியில் இது நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
அனைத்துலக திரை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்து விட்ட 44 வயது பிரியங்கா, Robert Downey Jr., Anne Hathaway, Paul Mescal, Gwyneth Paltrow, Chris Evans போன்ற ஹோலிவூட் நட்சத்திரங்களுடன் இணைந்து மேடையேறுகிறார்.
2016-ல் முதன்முதலாக ஆஸ்கார் மேடையில் விருது வழங்குபவராக வந்தவர், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரும்புகிறார்.
ஹோலிவூட் சினிமாவின் சிறந்த தருணங்களை கொண்டாடும் இந்த நட்சத்திர விழாவில், சிவப்புக் கம்பள வரவேற்பில் பிரியங்காவின் தோற்றமும், மேடை நிகழ்ச்சியும் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



