Latestமலேசியா

40 ஆண்டுகளுக்கு முன்பு சேர்த்த சொத்துக்களுக்கு இப்போது கணக்குக் கேட்டால்….அது அதிகார துஷ்பிரயோகமில்லையா? மகாதீர் கேள்வி

பாங்கி, செப்டம்பர்-2 – ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நடப்பு அரசாங்கம் அரசியலாக்குவதாக, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் குற்றம் சாட்டியுள்ளார்.

அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்கு ஊழல் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதாக, அந்த முதுபெரும் தலைவர் சொன்னார்.

ஊழல் வேரறுப்பு என்ற பெயரில் நடைமுறைக்கு சாத்தியமில்லாததை எல்லாம் கேட்கின்றனர்.

வருமான வரிப் பணத்தை முறையாகச் செலுத்தி வந்துள்ள போதிலும், 40 ஆண்டுகளுக்கு முன்பு சேர்த்த சொத்துக்களுக்கு இப்போது மொத்தமாகக் கணக்குக் கேட்கின்றனர்.

இது அதிகார துஷ்பிரயோகம் இல்லையெனில் வேறென்னவாக இருக்குமென மகாதீர் கேள்விக் கேட்டார்.

கொஞ்சம் வசதியாக வாழ்ந்தாலும், சொத்து விவரங்களை அறிவிக்கக் கோரப்படலாமென மக்கள் இப்போது பயத்தில் உள்ளனர் என 99 அந்த முன்னாள் இருமுறை பிரதமர் கூறிக் கொண்டார்.

கொஞ்சம் விட்டால் பள்ளி காலத்திலிருந்தே சொத்து விவரங்களை அறிவிக்கச் சொல்வார்கள் போலிருக்கிறது என அவர் கிண்டலாகச் சொன்னார்.

மகாதீர் பொதுவாகச் சொன்னாலும், அவர் தமது அனுபவத்தைத் தான் சொல்கின்றார் என்பதை யூகிக்க முடியாமலில்லை.

மகாதீர் முதன் முறையாக பிரதமர் ஆன 1981-ஆம் ஆண்டிலிருந்து, அவரின் இரு மூத்த மகன்கள் Mirzan மற்றும் Mohkzani தங்களின் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்களை அறிவிக்க வேண்டுமென, கடந்தாண்டு இறுதியில் MACC நோட்டீஸ் அனுப்பியிருந்தது நினைவிருக்கலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!