குவாலா சிலாங்கூர், செப்டம்பர் -7 – குவாலா சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஆரம்பப் பள்ளியில், வரிசை மாறி நின்றான் எனக் கூறி இராண்டாமாண்டு மாணவனை ஆசிரியர் கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார்.
விளையாட்டுப் பயற்சிகள் முடிந்ததும் அவரவர் வகுப்புக்கேற்ப வரிசையில் நிற்குமாறு பணிக்கப்பட்ட போது அச்சம்பவம் நிகழ்ந்தது.
மாலை 5.50 மணிக்கு பையனைக் கூட்டிச் செல்வதற்காக வந்த தாய், அவனது வலது கன்னம் சிவந்தும் வீங்கிப் போயிருந்ததும் கண்டு சந்தேகமடைந்தார்.
8 வயது மகனும் கன்னம் வலிப்பதாக அழுதுள்ளான்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெறச் சென்ற போது அது ஒரு மென்மையான திசு காயம் என உறுதிச் செய்யப்பட்டது.
ஆசிரியரின் செயலால் அதிருப்தி அடைந்த தாய் உடனடியாக போலீசில் புகாரளித்தார்.
போலீஸ் விசாரணையில், ஆசிரியர் மாணவனை பின்புறத்திலிருந்து backhand முறையில் அறைந்திருப்பது தெரிய வந்தது.
ஆசிரியரிடம் விசாரணைத் தொடருவதாக குவாலா சிலாங்கூர் போலீஸ் கூறியது.