பெய்ஜிங், செப்டம்பர் -21 – மலேசியாவின் வெளியுறவுக் கொள்கை எப்போதுமே சீனாவுடனான வலுவான ஒத்துழைப்பை நோக்கியே இருந்துள்ளதாக, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கூறியுள்ளார்.
“எங்கள் நாட்டில் எத்தனையோ அரசாங்கங்கள் மாறியிருக்கலாம், ஆனால் சீனாவுடனான வலுவான பங்காளித்துவம் மட்டும் மாறவில்லை”
இது இனியும் தொடர்ந்து, இரு நாடுகளுமே கூட்டாக முன்னேற வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என, சீன அதிபர் Xi Jinping-கை நேற்று சந்தித்து பேசிய போது சுல்தான் இப்ராஹிம் சொன்னார்.
Xi-யின் அழைப்பை ஏற்று, 17-வது மாமன்னர் என்ற முறையில் முதல் தடவையாக அரசு முறைப் பயணமாக அவர் பெய்ஜிங் சென்றுள்ளார்.
தமக்கு சீன அரசாங்கம் வழங்கிய மாபெரும் வரவேற்புக்கும் உபசரிப்புக்கும் அவர் நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.
அடுத்த முறை மலேசியாவுக்கு வருமாறும் சீன அதிபருக்கு மாமன்னர் அழைப்பு விடுத்தார்.
4 நாள் அதிகாரத்துவப் பயணமாக பெய்ஜிங் சென்றடைந்த மாமன்னருக்கு முன்னதாக Great Hall of the People சதுக்கத்தில் சடங்குப்பூர்வமான தேசிய வரவேற்புக் கொடுக்கப்பட்டது.