கோத்தா பெலுட், செப்டம்பர் 24 – சபா, கோத்த பெலூட் (Kota Belud), Plaza Alap Bana கட்டிடத்தின் படிக்கட்டில் தூக்கில் தொங்கிய ஆடவரைக் கண்டு, அங்குள்ளவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
இன்று காலையில், 24 வயது மதிக்கத்தக்க பிலிப்பைன்ஸ் ஆடவரின் தொங்கிய நிலையிலிருந்த சடலத்தைக் கண்டு, பொதுமக்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட அந்த ஆடவரின் தனிப்பட்ட சிக்கலினால், சுயமாகவே கழுத்தை நெரித்துக் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக கோத்தா பெலுட் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரிடெண்டன் ஷாருதீன் (Superintenden Shahrudin) கூறினார்.
முதற்கட்ட விசாரணையில் எந்த குற்றவியல் தடயங்களும் கண்டறியப்படவில்லை என்றும், அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தற்போது திடீர் மரணமாக வைக்கப்படுத்தப்பட்டுள்ளது