ஜியோர்ஜ்டவுன், செப்டம்பர் -27, தனது மெய்க்காவலரை பன்றி இறைச்சி சாப்பிட கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுவதை, பினாங்கைச் சேர்ந்த செனட்டர் ஒருவர் மறுத்துள்ளார்.
அக்குற்றச்சாட்டை விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீசிலும் அவர் புகார் செய்துள்ளார்.
அதனை உறுதிபடுத்திய பினாங்கு போலீஸ் தலைவர் Hamzah Ahmad, அக்குற்றச்சாட்டை மறுத்து சம்பந்தப்பட்ட மெய்க்காவலரும் போலீஸ் புகார் செய்திருப்பதாகச் சொன்னார்.
மேற்கொண்டு விசாரித்ததில், நாட்டில் வேறெங்கும் அப்படியோர் புகார் செய்யப்படவில்லை.
எனினும் அது குறித்து மேல் விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு, அரசு தரப்பு துணைத் தலைமை வழக்கறிஞரிடம் அனுமதிப் பெறப்படுமென Hamzah சொன்னார்.
பன்றி இறைச்சியைச் சாப்பிட கட்டாயப்படுத்தியதாக மெய்க்காவலரே புகார் செய்திருக்கிறாராமே என, கைப்பேசியில் தமக்கு அழைத்தவர் விசாரித்ததை அடுத்தே அந்த செனட்டர் போலீசில் புகார் செய்ததாகத் தெரிகிறது.