
பெய்ஜிங், செப்டம்பர் -28, சீனாவில் இணையம் வாயிலாக டுரியான் பழங்களை ஆர்டர் செய்த ஆடவர், பெட்டியைத் திறந்தபோது அதில் ஒரு பாம்பும் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அட்டைப் பெட்டிக்குள் சுமார் 1 மீட்டர் நீளத்துக்கு அப்பாம்பு இருந்ததால் கலக்கமுற்றவர், உடனடியாக போலீசை அழைத்து உதவிக் கோரினார்.
போலீஸ் வந்து பாம்பை பிடித்து ஒரு பையில் போட்டது.
என்றாலும் அவ்வாடவருக்கு பீதி அடங்கவில்லை.
டுரியான் பழங்களோடு சேர்த்து அந்த அட்டைப் பெட்டியையும் நீங்களே எடுத்துச் சென்று விடுங்கள் என போலீசிடம் கூறினார்.
இனியொரு முறை இணையத்தில் டுரியான் பழங்களை ஆர்டர் செய்யப்போவதில்லை என அவர் சபதமே எடுத்துள்ளார்.