Latestமலேசியா

காராக் நெடுஞ்சாலையில் 7 வாகனங்களை உட்படுத்திய கோர விபத்து; மூவர் பலி

பெந்தோங், செப்டம்பர்-30, பஹாங், பெந்தோங், புக்கிட் திங்கி அருகே இன்று அதிகாலை 7 வாகனங்களை உட்படுத்திய கோர விபத்தில், மூன்று ஆடவர்கள் பலியாயினர்.

40 வயது Mohd Ridzuan Zulkafly, 39 வயது Muhamad Zaimi Shariff, 23 வயது Muhammad Azizul Fitrie Md Zairi ஆகியோரே மரணமடைந்தவர்கள் ஆவர்.

காராக் நெடுஞ்சாலையின் 42-வது கிலோ மீட்டரில் அவ்விபத்து நிகழ்ந்தது.

4 கார்கள், ஒரு 3 டன் லாரி, 2 டிரேய்லர்கள் ஆகியவற்றை உட்படுத்திய அவ்விபத்தில், மொத்தமாக 13 பேர் பாதிக்கப்பட்டனர்.

மூன்று ஆடவர்கள் படுகாயம் அடைந்தனர், 2 பெண்களுக்கு சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன.

மேலும் மூன்று ஆடவர்களும் இரு பெண்களும் காயமின்றி தப்பியதாக, பஹாங் தீயணைப்புத் துறை கூறியது.

மரணமடைந்தவர்களின் உடல்கள் மேல் நடவடிக்கைகாக போலீசிடம் ஒப்படைக்கப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!