கோலாலம்பூர், அக்டோபர் 1 – மலேசியாவைச் செயற்கை நுண்ணறிவு மையமாக மாற்ற அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது.
அதற்கான தொழில்நுட்ப செயல் திட்டத்தை 12 மாதங்களுக்குள் முடிக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.
போட்டி நிறைந்த உலகளாவிய செயற்கை நுண்ணறிவு நிலப்பரப்பில், முன்முயற்சிகளை ஒருங்கிணைக்க அரசாங்கம், ஒரு தேசிய செயற்கை நுண்ணறிவு AI அலுவலகத்தை நிறுவவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, பொது மற்றும் தனியார் துறைகளில் கிளவுட் சூழலில் முக்கியமான தரவு மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கான வலுவான பாதுகாப்பு கட்டமைப்பையும் நெறிமுறையையும் அரசாங்கம் நிறுவும் என்று அவர் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு ஆசியான் தலைவர் பதவியை ஏற்கும் போது, மலேசியா தன்னை செயற்கை நுண்ணறிவில் முன்னோக்கி பார்க்கும் என்றும், இது நாட்டின் பொருளாதார போட்டி தன்மைக்கும் ஊக்குவிக்கும் என்றும், கூகுளின் ‘Mantap Malaysia Bersama AI’ நிகழ்ச்சியில் அவர் கூறினார்.