குவாந்தான், அக்டோபர்-4, இல்லாத ஒரு முதலீட்டுத் திட்டத்தை நம்பி தனது EPF சேமிப்புப் பணம் மற்றும் பங்கு முதலீட்டில் கிடைக்கப் பெற்றதுமான 163,300 ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார், குவாந்தானைச் சேர்ந்த ஓய்வுப் பெற்ற தனியார் துறை ஊழியர் ஒருவர்.
Group L-Trader என்ற குழுவின் உறுப்பினர் என்றும் தன் பெயர் செலினா என்றும் அடையாளம் கூறிக்கொண்ட பெண்ணொருவர், கடந்தாண்டு ஜூலை வாக்கில் 50 வயது மதிக்கத்தக்க அவ்வாடவரின் கைப்பேசிக்கு அழைத்த போதே அனைத்தும் தொடங்கியது.
செலினாவின் முதலீடு குறித்த பேச்சில் ஈர்க்கப்பட்ட அவ்வாடவர், WhatsApp-பில் கொடுக்கப்பட்ட link இணைப்பைத் தட்டி, கைப்பேசி எண்கள் உள்ளிட்ட தனது சுயவிவரங்களையும் நிரப்பியுள்ளார்.
முதலீட்டில் பதிவுச் செய்த கையோடு e-wallet வாயிலாக, அந்நிறுவனம் அவருக்கு 5,000 ரிங்கிட்டைப் போட்டுள்ளது.
பிறகு, முதலீட்டு இலாபமாக 213 ரிங்கிட் 5 சென் கிடைத்திருப்பதாகவும், அது அவரின் வங்கிக் கணக்கில் போடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனால் சந்தோஷமடைந்தவர், கொடுக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு 15 தடவையாக தனது வங்கிக் கணக்கிலிருந்து பெரும் பணத்தை மாற்றியுள்ளார்.
ஆனால், போட்டப் பணத்திற்கான இலாபத் தொகை எதுவும் அதன் பின்னர் வரவேயில்லை; சாக்குப் போக்கு மட்டுமே பதிலாக வந்ததால், அவ்வாடவர் தாம் ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசில் புகார் செய்தார்.