துபாய், அக்டோபர்-7 – லெபனானில் சில வாரங்களுக்கு முன்னர் பேஜர் (pager) மற்றும் வாக்கி டாக்கி (walkie-talkie) தொடர்பு சாதனங்கள் வெடித்த சம்பவத்தை அடுத்து, எமிரேட்ஸ் விமானங்களில் அவற்றின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவ்விரு கருவிகளையும் கைப்பைகளிலோ அல்லது பயணப் பெட்டிகளிலோ (luggage) வைத்து எடுத்து வர, துபாய் வழியாகச் செல்லும் அனைத்துப் பயணிகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக, எமிரேட்ஸ் விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மீறி கொண்டு வரப்பட்டால், துபாய் போலீஸ் அவற்றை பறிமுதல் செய்யுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக லெபனான் முழுவதும் ஹிஸ்புல்லா தரப்புக்குச் சொந்தமான பேஜர்களும், வாக்கி டாக்கிகளும் ஒரே நேரத்தில் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
37 பேர் கொல்லப்பட்டு, சிறார்கள் உட்பட மூவாயிரம் பேர் வரை காயமடைந்த அத்தாக்குதலுக்கு இஸ்ரேலே காரணமென லெபனான் குற்றஞ்சாட்டியது.