கோலாலம்பூர், அக்டோபர் 9 – எதிர்வரும் அக்டோபர் 31ஆம் திகதி வியாழக்கிழமை, கொண்டாடப்படும், 2024ஆம் ஆண்டிற்கான தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பள்ளிகளுக்கு கல்வி அமைச்சு கூடுதல் விடுமுறையை அறிவித்துள்ளது.
குழு A-விலுள்ள ஜோகூர், கெடா, கிளந்தான், திரங்கானு ஆகிய மாநிலங்களிலுள்ள பள்ளிகளுக்கு அக்டோபர் 30ஆம் திகதி தொடங்கி நவம்பர் 2ஆம் திகதி வரை, நான்கு நாட்களுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், குழு B-யிலுள்ள, மலாக்கா, நெகிரி செம்பிலான், பாஹாங், பேராக், பெர்லிஸ், பினாங்கு, சபா, சிலாங்கூர், கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம், லாபுவான் கூட்டரசு பிரதேசம், புத்ராஜெயா கூட்டரசுப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அக்டோபர் 30ஆம் திகதி தொடங்கி நவம்பர் 3ஆம் திகதி வரை, ஐந்து நாட்களுக்கு விடுமுறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் சரவாக் மாநிலத்திற்கு மட்டும் கூடுதல் விடுமுறை ஒதுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.