கோத்தா பாரு, அக்டோபர் 11 – அழகுசாதனப் பொருட்கள், பெட்ரோல் உள்ளிட்ட பல்வேறு கடத்தல் பொருட்களைக் கொண்டு வந்த பெண் உட்பட 6 கடத்தல்காரர்கள், நேற்று ரந்தாவ் பஞ்சாங் (Rantau Panjang) மற்றும் தும்பாட் (Tumpat) ஆகிய 4 வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர்.
24 வயது முதல் 42 வயதுக்குட்பட்ட அந்தக் கடத்தல்காரர்களிடமிருந்து, மளிகைப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், எருமை, அரிசி மற்றும் பெட்ரோல் உட்பட ஒரு வாகனம் என 53,000 ரிங்கிட் மதிப்புள்ள பொருட்களைக் காவல் துறை பறிமுதல் செய்தது.
இதனிடையே, கடத்தல் பொருட்களைக் கொண்டு வரும் கடத்தல்காரர்களுக்கு பொருட்களைப் பொறுத்து, 50 ரிங்கிட் முதல் 250 ரிங்கிட் வரை ஊதியம் வழங்கப்படும் என்பதும் முதற்கட்ட விசாரணையில் காவல் துறை கண்டறிந்துள்ளது.