ஜோகூர், அக்டோபர் 11 – ஜோகூரில், காதல் வலையில் சிக்க வைத்து, கைப்பேசி மோசடியில் ஈடுபட்டு வந்த 20 வெளிநாட்டு ஆடவர்களை காவல்துறை வெற்றிகரமாகக் கைது செய்துள்ளது.
கடந்த செப்டம்பர் 23ஆம் திகதி அன்று, ஜோகூரில் Horizon Hills, ஈச்கண்டர் புத்திரியில் நடத்தப்பட்ட சோதனையில், இல்லாத வேலையை வழங்குவதாகக் கைப்பேசி மோசடியில் ஈடுபட்டு வந்த 20 வெளிநாட்டினர் பிடிபட்டனர்.
கைப்பேசி வாயிலாக வெளிநாட்டினர்களை அழைத்து, குறைந்த காலக்கெடுவில் அதிக லாபத்தைப் பெறலாம் என இல்லாத இணைய வேலை வாய்ப்புகளுக்கு உத்தரவாதம் வழங்கி பணத்தை மோசடி செய்து வந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், காதல் வலையை ஆதாரமாகக் கொண்டு மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனிடையே பாதிக்கப்பட்ட ஒருவர் தனது பணத்தை மீட்க முடியாத நிலையில் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வழங்கிய புகாரைத் தொடர்ந்து, ஈச்கண்டர் புத்திரி காவல்துறை தலைவரும் உதவி ஆணையருமான குமரேசன் அதிரடி சோதனையில் களம் இறங்கியதாக கூறினாஎ.
21 வயது முதல் 36 வயதுக்குட்பட்ட வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டத்துடன் கைதொலைபேசிகளும் மடிக்கணினிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.