டுங்குன், அக்டோபர்-14, திரங்கானு, டுங்குன் அருகே ஆயிரக்கணக்கான நெத்திலி மீன்கள் தரை தட்டிய சம்பவம் வைரலாகியுள்ளது.
எனினும், தெலுக் லீப்பாட் கடலிலிருந்து டுங்குன் UiTM பல்கலைக்கழகம் அருகே வரையுள்ள கடற்கரையில் அவை தரை தட்டிய சம்பவமொன்றும் புதிதல்ல.
ஆண்டு தோறும் நடப்பது தான்; கடலோரமாக விளையாடும் மீன்கள், அலைகள் வேகமாகத் தள்ளும்போது கரைக்கு வந்து விழுவதாக மீனவர் ஒருவர் கூறினார்.
இவ்வாண்டு அப்படி நடப்பது இதுதான் முதன்முறை; அதனைப் பார்த்தவர்கள் வீடியோ எடுத்து வைரலாக்கியுள்ளனர் என்றாரவர்.
வழக்கமாக காலையில் கரை தட்டும் மீன்கள் மதியத்திற்குள் வேறு இடங்களுக்குச் சென்று விடும்.
ஞாயிற்றுக்கிழமை காலை மீன்பிடிக்க கடலுக்குள் இறங்கிய சில மீனவர்கள், ஒரு லாரி நிறைய நெத்திலி மீன்களை அள்ளியது குறிப்பிடத்தக்கது.
இரு ஆடவர்கள் கடற்கரையில் துள்ளிக் கொண்டிருக்கும் பெரிய வகை நெத்திலி மீன்களைப் பிடித்து பாட்டில்களில் அடைக்கும் வீடியோக்கள், முன்னதாக டிக் டோக்கில் வைரலாகின.