கோலாலம்பூர், அக்டோபர்-14, குறைந்தபட்ச அடிப்படைச் சம்பள விகிதம் 3,000 முதல் 4,000 ரிங்கிட் விகிதத்தைத் தொட்டால் மட்டுமே, பொருள் மற்றும் சேவை வரியான GST-யை அரசாங்கம் மீண்டும் அமுல்படுத்தும்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதனைத் தெரிவித்துள்ளார்.
GST வரியே ஆகச் சிறந்த மற்றும் வெளிப்படையான வரி விதிப்பு முறையாகும்.
அது, மேலும் அதிக வரி வசூலிப்புடன் அரசாங்க வருவாயை அதிகரிக்க உதவும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
என்றாலும் ஏழை மக்களுக்கு அது சுமையாக இருக்கக் கூடாது என்பதில் அரசாங்கம் தெளிவாக இருப்பதாக பிரதமர் கூறினார்.
சில ஆண்டுகள் போகட்டும்; சம்பளம் உயர்ந்தால் GST-யை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரலாமென்றார் அவர்.
GST விவகாரம் இன்று நேற்று வந்ததல்ல; 1990-ஆம் ஆண்டுகளில் தாம் நிதியமைச்சராக இருந்த காலத்திலேயே அது சர்ச்சையாக இருந்தது.
லஞ்ச ஊழலைத் துடைத் தொழிப்பதே முதன்மையாக இருக்க வேண்டுமென்பதால் அப்போது GST அமுலாக்கத்தில் தனக்கு உடன்பாடில்லாமல் போனதாக அன்வார் சொன்னார்.
தற்போது நாட்டில் குறைந்தபட்ச சம்பள விகிதம் 1,500 ரிங்கிட்டாகும்.