கோலாலம்பூர், அக் 16 – இன்னும் 2 வாரங்களில் இந்துக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடப்படவிருக்கும் இவ்வேளையில் அதனை வரவேற்கும் வகையில்,
சிறப்பாக வடிவமைக்கப்பட்ட டிரக்கில் உறுமி மேள கலைஞர்கள் தங்களது நடமாடும் படைப்புக்களை கோலாலம்பூர் நகர நெடுக்க ஊர்வலமாக செல்லும் காணொளி வைரலாகியுள்ளது.
@libertyinsurancemalaysia மற்றும் @kurniainsurans நிறுவனங்களின் முயற்சியில் இது மேற்கொள்ளப்பட்டது.
இதில் பங்கேற்று கிள்ளானைச் சேர்ந்த @gangeswaran_உறுமி மேள கலைஞர்களின் அற்புதமான படைப்பு அனைவரையும் கவர்ந்தது.
பல வர்ணங்களை கொண்ட மாலைகள் மற்றும் கவர்ச்சிகரமான தீபாவளி வாழ்த்துக்களால் அலங்கரிக்கப்பட்ட்டிருந்த அந்த டிரக் பார்ப்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது.